DMK MLAs Meeting
DMK MLAs Meeting

DMK MLAs Meeting – சென்னை: ‘திருவாரூர் தேர்தல் ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

இதன் எதிரொலியாக இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது’.

திருவாரூர் இடைத்தேர்தல், வரும் ஜனவரி 28-ஆம் தேதி நடத்துவதாக தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கஜா புயல் நிவாரண பணிகள் நடந்து வருவதன் காரணமாக, திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி போடுமாறு பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தலை ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் “திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு கட்சியினர் தங்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை அளித்து வருகிறது”.

இத்தகைய பரபரப்பான சூழலில் தற்போது, திமுக எம்எல்ஏக்கள் இன்று மாலை ஆலோசனை கூட்டத்தை கூட்டுகிறது. இதில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here