DMK IT Wing Advice to AIADMK
DMK IT Wing Advice to AIADMK

அதிமுக ஐடி விங்கிற்கு திமுக ஐடி விங் மாநிலச் செயலாளர் பி.டி பழனிவேல் தியாகராஜன் கொடுத்த அட்வைஸ் வைரலாகி வருகிறது.

DMK IT Wing Advice to AIADMK : கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறாக பேசிய கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவிற்கு தமிழகம் முழுவதும் இந்து மதத்தினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பாஜகவினர் மற்றும் பல இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்திருந்த அதைத் தொடர்ந்து அந்த யூடியூப் பக்கத்தின் தொகுப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலின் பின்னணியில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த குற்றச்சாட்டுக்கு திமுகவும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இது பற்றி எதையும் கூறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் திமுகவின் ஐடி விங் மாநில செயலாளரான பிடி பழனிவேல் தியாகராஜன் அதிமுகவின் ஐடி விங்கை கவனித்து வரும் ராஜ் சத்யன், சிங்கை ராமச்சந்திரன் ஆகியோருக்கு அறிவுரை வழங்குவதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரானா பாதிப்புக்கு பின் விஜய் படத்தை ரி-ரிலீசாகும் செய்யும் நான்காவது நாடு – வெளியான அசத்தலான அறிவிப்பு!

அந்த அறிக்கையில் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அப்படி செய்வார்கள் கழிவுநீர் கால்வாயில் ஒட்டி இருக்கும் தொற்றுக் கிருமி அட்டைகள் போல என கூறியுள்ளார்.

தனக்கும் ஆன்மிகத்தில் நம்பிக்கை இன்று வரை தங்களது குடும்பம் பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் எங்கள் மண்டகப்படியில் முருகன் எழுந்தருளும் மரபு இன்றும் தொடர்கிறது என கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் 10 நாள் ராக்கால பூஜை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அரசியல் என்பது ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்டது. அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என கூறியுள்ளார். அதில் நான் தெளிவாக உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் அவரது அறிக்கையை இன்னும் பல தகவல்களை கூறியுள்ளார். அவை இதோ

இந்த அறிக்கையின் மூலம் அவர் கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் வீடியோவிற்கும் திமுகவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூற முயல்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதே சமயம் அந்தக் கடிதம் பி.டி பழனிவேல் தியாகராஜையும் திமுகவையும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.