Diwali 2018

Diwali 2018 : தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5 – ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டில் வரும் நவம்பர் 6 – ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி செவ்வாய்கிழமை வருவதால், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் பணியாளர்கள் அதற்கு முந்தைய நாளான திங்கள் கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாட முடிவு செய்து இருந்தனர்.

எனவே வரும் 5 – ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்குமாறு பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தற்போது தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5 – ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்துள்ளது .

தமிழகத்தில் உள்ள மாநில அரசு, கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்கும் அன்று விடுமுறை அறிவித்துள்ளது.

அந்த விடுமுறையை ஈடுசெய்ய 2 வது சனிக்கிழமையான நவம்பர் 10- ஆம் தேதி பணி நாளாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மாநில அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் விடுமுறையை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர்..

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.