அசுரன் பட வசனத்தை பேசி மாணவர்களை ஊக்குவித்த விஜய் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். சிறந்த படங்கள் மூலம் பல தேசிய விருதுகளை குவித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து இருக்கும் இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

இதன் வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முழு வீச்சில் உருவாக்கி வரும் வெற்றிமாறன் நேற்றைய தினம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த நிகழ்ச்சியில் அசுரன் பட வசனத்தை பேசிய விஜய் குறித்து பகிர்ந்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “சினிமாவில் நாம் பேசிய வசனம், சமூகத்தில் மிகப் பிரபலமான ஒருவர் மூலமாக சென்றடையும்போது அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தான் நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜருடன் சேர்த்து அண்ணாவையும் படிக்க வேண்டும்” என்றும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.