நடிகர் விஜய் எப்படி வாரிசு படத்தின் கதைக்கு சம்மதம் தெரிவித்தார் என்ற சுவாரசியமான சீக்ரெட்டை இயக்குனர் வம்சி பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வம்சி படைப்பள்ளி. இவர் தற்போது இளைய தளபதி விஜய் வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வாரிசு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சரத்குமார், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

வாரிசு படத்தின் கதையை கேட்டு விஜய் கொடுத்த ரியாக்ஷன்!!… வம்சி பகிர்ந்த சீக்ரெட் தகவல் வைரல்!.

தில் ராஜு தயாரிப்பு தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதையை விஜயிடன் சொன்ன போது நடந்த சுவாரஸ்ய தகவலை பற்றி வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாரிசு படத்தின் கதையை கேட்டு விஜய் கொடுத்த ரியாக்ஷன்!!… வம்சி பகிர்ந்த சீக்ரெட் தகவல் வைரல்!.

அதில் அவர், விஜயை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றேன். அவரே என்னை வரவேற்று உபசரித்தார். தொடர்ந்து கதை கூற தொடங்கினேன்.ஒரு இடத்தில் கூட பேசாமல் முழு கதையை பொறுமையாக கேட்டார். இடையில் எனக்கு பயத்தில் வியர்க்க துவங்கியது. இதை கூட கவனித்த விஜய் ஏசியை அதிகரித்தார். கிளைமேக்ஸ் வரை சொல்லி முடித்தேன். சில நொடிகள் சத்தமே இல்லை. பின்னர் குரலை கணைத்துக்கொண்டு சரி பண்லாம் என சுருக்கமாக முடித்துக் கொண்டார். அதுவே பெரிய ஆச்சரிய அதிர்ச்சியாக இருந்தது எனக் கூறி இருக்கிறார் வம்சி.