இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே ரஜினியை வைத்து கோச்சடையான், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றிருந்தார். அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது வெப் சீரிஸ் தொடர் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.