director siruthai siva says about directing ajith starrer ak64 movie..
director siruthai siva says about directing ajith starrer ak64 movie..

V சென்டிமென்டில் ‘தல’ அஜித்துக்கு நான்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர், மீண்டும் 5-வது முறையாக அஜித்துடன் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பார்ப்போம்..

‘தல ‘அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவிருக்கின்றன.
இதனிடையில் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகி, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால், ஏகே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் வெற்றிக் கூட்டணியாக இருப்பவர்கள் அஜித், சிறுத்தை சிவா. இவர்கள் காம்போவில் பல ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக இவர்களது கூட்டணியில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய ஹிட்டடித்துள்ளன.

இப்படி, தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ள இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளனர்.
அதாவது சிறுத்தை சிவா கடைசியாக ரஜினி நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே, இழந்த வெற்றியை மீண்டும் பெறவேண்டும் என்ற முனைப்புடன் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் அஜித்துடன் ஐந்தாவது முறை கூட்டணி அமைப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக பேசியுள்ள இயக்குனர் சிறுத்தை சிவா, ‘அஜித்துடன் கண்டிப்பாக இணைந்து ஒரு படம் பண்ணுவேன். ஆனால், நான் அதை சொன்னால் சரியாக இருக்காது. அஜித் சார் அவர்களே அறிவித்தால் நன்றாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக சிறுத்தை சிவா, அஜித் இருவரும் ஐந்தாவது முறையாக இணைகின்றனர். இப்படம் ‘ஏகே 64’ ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

5-வது பட டைட்டிலும் V வரிசை தானே சிவா சார்.? தொடரட்டும் வெற்றி..!