இந்தியன் 2 திரைப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதை இயக்குனர் ஷங்கர் பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் தற்போது கமலின் ‘இந்தியன் 2’, ராம்சரனின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார்.

அந்த வகையில் இவரது இயக்கத்தில் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில் அதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “ஒரு நல்ல பவர்ஃபுல் ஷூட்டிங் முடிந்து விட்டது, இதற்கு கமல்ஹாசன் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டு அடுத்ததாக ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க செல்கிறேன்”. என்று அப்பதிவில் தெரிவித்திருக்கிறார்.