மெட்டி ஒலி 2 சீரியலை இயக்குவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் மெட்டி ஒலி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஓடிய இந்த சீரியலுக்கு தற்போது வரை மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

இரண்டாம் பாகம் உருவாக போவதாக கடந்த சில வருடங்களாகவே தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் இரண்டாம் பாகத்திற்காக முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் புதிய நடிகர் நடிகைகள் என பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. 

அதுமட்டுமின்றி மெட்டிஒலி சீரியல் இரண்டாவது பாகத்தை இயக்க போவது திருமுருகன் இல்லை எனவும் சொல்லப்படுகிறது. மெட்டி ஒலி சீரியலில் செகண்ட் யூனிட் இயக்குனராகப் பணியாற்றிய விக்ரமாதித்தன் தான் இந்த சீரியலை இயக்குகிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.