director nelson dilipkumar going to direct junior ntr after rajinikanths jailer-2 movie
director nelson dilipkumar going to direct junior ntr after rajinikanths jailer-2 movie

‘சிறுதுளி பெருவெள்ளம் ஆகும்’ என்பது போல, கோலமாவு கோகிலா படத்தை உருவாக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் காட்டில் செம மழை. எப்டின்னா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் ரசிகர்களையும் பொதுமக்களையும் ரசிக்க வைத்தது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக குடும்பத்தினருடன் இருக்கும் காட்சிகளிலும் தொடர்ந்து வில்லன்களை பழிவாங்கும் காட்சிகளிலும் அவரது நடிப்பு அதிரடி கிளப்பியிருந்தது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த நிலையில், அதிரடி சரவெடியாக வரவேற்பிலும் வசூலிலும் மாஸ் காட்டியது ஜெயிலர். குறிப்பாக, ரஜினிகாந்தின் பிரசென்ஸ் சிறப்பாக அமைந்திருந்தது.

ரிடையர்ட் ஜெயிலராக இந்தப் படத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ரிடையர்ட் ஆன நிலையில், வீட்டில் அதிகாரிகள் செய்யும் வேலைகளை காமெடியாக பதிவு செய்திருந்தார் இயக்குநர். இதேபோல, தன்னுடைய மகன் இறப்பிற்கு பழிவாங்க ரஜினிகாந்த் களமிறங்கும் காட்சிகளும் மிரட்டியது.

ஒரு கட்டத்தில் தன்னுடைய மகன்தான் குற்றவாளி என்ற வகையில், அவர் எடுக்கும் அதிரடி முடிவும் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்திருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக உருவான இந்தப் படத்தின் வெற்றியை ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் மற்றும் படக்குழுவினருடன் தயாரிப்பு தரப்பு பகிர்ந்து கொண்டது.

இந்நிலையில், இந்தப் படத்தின் 2-வது பாகம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள நிலையில், இதன் ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 10-ம் தேதி ‘வேட்டையன்’ படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஜெயிலர்-2 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ஜெயிலர்-2 படத்தை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்குப் படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆரை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியுள்ளார்.

தேவரா படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரின் இந்தப் படத்திலும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக நெல்சன் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தேவரா படத்தின் பிரமோஷன்களுக்காக சென்னை வந்திருந்த ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதேபோல, கோலிவுட்டின் இளம் இயக்குநர்களுடன் இணையவும் விருப்பம் தெரிவித்திக்கிறார். இதனால், உதவி இயக்குனர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

‘கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது’ என்பதை புரிந்து கொண்டார் ஜூனியர் என்டிஆர்.