லியோ படப்பிடிப்பில் தனது பகுதியை நிறைவு செய்த இயக்குனர் மிஷ்கின் வெளியிட்டு இருக்கும் அறிக்கை வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காஷ்மீரில் கடும் குளிரில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மிஷ்கின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் தன்னுடைய பகுதியை நிறைவு செய்ததாக குறிப்பிட்டு லியோ படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், “500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. என் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பானவராகவும், கண்டிப்பாகவும் களத்தில் இறங்கி எனது காட்சிகளை நிறைவு செய்தான் அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜயுடன் இப்படத்தில் ஒரு நடிகனாக இணைந்து பணியாற்றியதை நினைத்து சந்தோஷமடைகிறேன் என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியடையும் என தெரிவித்துள்ளார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.