இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரை உலகில் வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபல இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாறி செல்வராஜ். அவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். இந்த புதிய படம் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதை புதிய போஸ்டருடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

https://twitter.com/mari_selvaraj/status/1594185507134652417?t=zkkcTUnSg4y4OZsukFrSUA&s=19