நான் கடவுளாக விரும்பவில்லை.. மாரி செல்வராஜ் ஓபன் டாக்.!!
மாரி செல்வராஜ் பேச்சு இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் இவரது இயக்கத்திலும் துருவ் விக்ரம் நடிப்பிலும் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாரி செல்வராஜ் பேசி இருப்பது பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது அதாவது கண்டிப்பாக நான் நடிகனாக ஆக மாட்டேன் என்று கூறியுள்ளார் அதற்கான முக்கிய காரணமே நடிகரானால் என் பின் வருவதற்கு ஒரு கூட்டம் உருவாகிவிடும் நடித்தால் எளிதாக கடவுள் ஆகிவிடலாம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை நான் கடவுளாகவும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

