director m.rajesh open up about brother movie and actor jayam ravi character
director m.rajesh open up about brother movie and actor jayam ravi character

‘ரீல் வேற, ரியல் வேற.! இரண்டையும் போட்டு குழப்பிக்கக் கூடாது நெட்டிசன்ஸ்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அப்டி என்னதான் நடந்தது என்கிறீர்களா.? நீங்களே இந்த கதையை கேளுங்க..

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. ஜெனீ, காதலிக்க நேரமில்லை, பிரதர் என அடுத்தடுத்த படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரதர் படம் தீபாவளி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் சிறப்பாக வெளியிடப்பட்டு வரும் நிலையில், முன்னதாக வெளியான படத்தின் மக்காமிஷி பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படம் இந்த மாத இறுதியில் ரிலீஷ் ஆகிறது. இந்த நிலையில், இயக்குனர் எம்.ராஜேஷ், பிரதர் படம் குறித்தும் ஜெயம் ரவி குறித்தும் பல்வேறு சுவாரசியங்களை வெளியிட்டு வருகிறார்.

காமெடி என்டர்டைன்மென்டாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்தது குறித்து இயக்குனர் எம்.ராஜேஷ்,

‘ஜெயம் ரவியிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்குவதுதான் கடினம் என்றும், அவரிடம் ஓகே வாங்கி, கதை குறித்த தெளிவு அவருக்கு வந்துவிட்டால், அவர் இயக்கத்தில் தலையிட மாட்டார் என்றும் கூறியுள்ளார். ஜெயம் ரவி ஒரு முழுமையான நடிகர் என்றும், அவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றும், அதனால் ஜெயம் ரவியுடன் இணைந்து படம் செய்வது மிகவும் விருப்பமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஜெயம் ரவியை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப, எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்று எம்.ராஜேஷ் கூறியுள்ளது மிகப்பெரிய கேள்விகளை தற்போது ரகிர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார் ஜெயம் ரவி.

முன்னதாக அவரது மாமியார் வீட்டில் நிதி நெருக்கடியை சந்தித்ததாக அவர் வெளிப்படையாக பேசியுள்ள நிலையில், தற்போது எம்.ராஜேஷ், ஜெயம் ரவியை எப்படி வேண்டுமானாலும் நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றலாம் என்று கூறியுள்ளார். படங்களில் ஜெயம் ரவி கேரக்டர் மாற்றம் குறித்து ராஜேஷ் கூறிய நிலையில், இதை அவரது பர்சனல் வாழ்க்கையில் இணைத்து நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

விழுந்தாலும் விமர்சிப்பர், நிமிர்ந்து எழுந்தாலும் விமர்சிப்பர். இது மாறாது; ஊர் வாயை மூட, உலை மூடி போதாது ரவி சார் Cool..