director gnanavel uses rajinikanths super star power to convey a very powerful message in vettaiyan
director gnanavel uses rajinikanths super star power to convey a very powerful message in vettaiyan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படம் 10-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி, பேர் பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கி இருக்கிறார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில், வேட்டையன் படத்தில் அழுத்தமான மெசேஜ் சொல்வாரோ இயக்குனர். படத்தில் நிறைய அறிவுரைகள் இடம் பெற்றிருக்குமோ என்றால், நிச்சயமாக கிடையாது. ஏனெனில், முன்னதாக ரஜினி இது குறித்து தெளிவுபடுத்தி விட்டார் ‘ நமக்கு மெசேஜ் சொல்றதெல்லாம் சரிப்பட்டு வராது’ என.!

எனவே, இது முழுக்க முழுக்க அனல் பறக்க தெறிக்க விடும் கமர்ஷியல் பேக்கேஜ் தான். ஆனாலும், கல்வி மாஃபியா குறித்து சம்மட்டி அடி அடித்திருக்கிறார். இதில், அறிவுறுத்தல் இல்லாமல், ரஜினியே அதிகாரத்தை கையில் எடுத்து அடக்குகிறார்.

படம் வெளியான பின்னர், கல்வி மாஃபியா தொடர்பாக ஆங்காங்கே விரிவாக விவாதம் நடைபெற வாய்ப்புகள் அதிகம். ஆம்..’வேட்டையன்’ படத்தில் தற்போது கதை சம்பந்தமாக வெளியான தகவலின்படி…

அரசு பள்ளி ஒன்றுக்கும், ஆன்லைன் கல்வி மாஃபியாவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை தான் ‘வேட்டையன்’ படத்தின் மையக்கதையாம். துஷாரா விஜயன் ஆசிரியையாக நடித்திருக்கிறாராம். துஷாராவை சுற்றியே கதை நகரும் என்கிறார்கள். ஆசிரியரை ராணா கொல்ல, அவரை என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ள முடிவு செய்கிறாராம் ரஜினி.

அடேங்கப்பா.. ஆன்லைன் கல்வி மாஃபியாவா, இப்படி ஒரு சப்ஜெக்ட்டை யாருமே எதிர்பார்க்கவில்லையே ஞானவேல். ரஜினியை வைத்து கதை சொல்லியிருப்பதால், கல்வி மோசடி குறித்து ஞானவேல் சொல்ல விரும்பும் செய்தி அனைவருக்கும் சரியாக சென்று சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. வேட்டையன் படம் ரிலீஸான பிறகு ஆன்லைன் கல்வி மாஃபியா பற்றி நிறைய தகவல் வெளியே வரும் என எதிர்பார்க்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.

வேட்டையன் படம் பிற என்கவுன்டர் படங்களில் இருந்து தனித்து இருக்கும் என தெரிவித்துள்ளார் ஞானவேல். ஜெய்பீம் படம் போன்றே வேட்டையனும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வசூலிலும் புது சாதனை படைப்பான் வேட்டையன் என சினிமா ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அழியாத செல்வம் கல்வி தானே. அந்த கல்வி அனைவருக்கும் சமமாய் போய்ச் சேரட்டும். கற்கை நன்றே, கற்கை நன்றே என்பதை திரைக்கலை மூலமாக கமர்ஷியலாய் வலியுறுத்தியிருக்கிறார்களோ.! அவசியம் பார்ப்போம்; ஆழமாய் அளவின்றி படிப்போம்..!