‘கோலமாவு கோகிலா’ என்ற படம் இயக்கி மேல ஏறி வந்து ‘ஜெயிலர்’ எடுத்தார் நெல்சன். ஆனால், ஞானவேல்.. சில படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்து, லோ பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கி, இன்று மேலே ஏறி நின்று வேட்டையாடுகிறார். இதல்லவோ இலக்கை நோக்கிய குறி.. இலட்சிய வெ(ற்)றி..!

ஆம்., ரத்த சரித்திரம், பயணம், தோனி, உன் சமையல் அறையில் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதி வந்தார் ஞானவேல். பின்னர், அசோக் செல்வன் நடித்த ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் பெரிதாக போகவில்லை.

இதனை தொடர்ந்து, , சூர்யாவை வைத்து ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கினார். உலகளவில் பாராட்டுக்களை குவித்த அந்த படம் ஓடிடியில் வெளியானது. தற்போது, ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படம் தான் ஞானவேலுக்கு முதல் பாக்ஸ் ஆபிஸ் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர் அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

‘வேட்டையன்’ படத்தின் டீசர் தாறுமாறாக இருந்த அளவுக்கு, படத்தின் டிரெய்லர் இல்லையே என்கிற விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், அதற்கு பதிலளித்த ஞானவேல்…

‘அனிருத் ஹண்டர் வண்டார் பாடலுடன் டிரெய்லர் கட்ஸ் கொடுக்க வந்துட்டார். நான் தான் இந்த படம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ரசிகர்களை நாம் அதற்காக தயார்படுத்த வேண்டும். படத்தை ரசிகர்கள் காண வர காரணமே அந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை தாண்டி, ஒரு நல்ல கதை இருக்கும் என்பதால் தான். அதனால், இப்படி போவோம் என்றேன்’ என ஞானவேல் ‘வேட்டையன்’ டிரெய்லரில் அனிருத் அடக்கி வாசிக்க காரணமே நான்தான்’ என கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ‘ஜெய்பீம் படத்தை போலவே, இந்த படமும் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படமாக இருக்கும் என்பதால், பாக்ஸ் ஆபிஸில் நின்னு பேசும், நிச்சயம் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்’ எனவும் கூறினார். குறிப்பாக, ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் திரையில் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் வேற லெவல் அனுபவம் ரசிகர்களுக்கு கிடைக்கும்’ என்றும் ஞானவேல் உறுதியளித்துள்ளார். பார்க்கலாம்..

இயக்குநர் ஞானவேல் பேட்டியை, ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். ‘வேட்டையன்’ படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் சூடு பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுத பூஜையும் தீபாவளியும் ஒரே நாளில்-10-ந்தேதியே வந்திருச்சு..