துணிவு படம் எப்படி இருக்கு என்பது குறித்து தினேஷ் கார்த்திக் பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் துணிவு. எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் வெளியான இந்த படம் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் தற்போது தன்னுடைய 62 ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது துணிவு படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அதாவது ரசிகர் ஒருவர் துணிவு படம் பாத்துட்டீங்களா எப்படி இருக்கு என கேட்க தினேஷ் கார்த்திக் சூப்பர் என பதிலளித்துள்ளார். அவருடைய இந்த பதில் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது