Dikkilona Movie Review

டிக்கிலோனா படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம் வாங்க.

Dikkilona Movie Review : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து தற்போது ஹீரோவாக மட்டுமே காமெடி கலந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சந்தானம்.

விநாயகரை நீரில் கரைப்பது ஏன்? புராண விளக்கம்

இவரது நடிப்பில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் ஜீ5 வழியாக வெளிவந்த சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் தான் டிக்கிலோனா.

ஆறுமாசம் கழிச்சு வச்சு செய்யுங்க! – Actor Vijay Antony Emotional Speech | Kodiyil Oruvan Press Meet

சந்தானத்துடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம் பற்றிய விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

இபியில் வேலை செய்து வருபவர் சந்தானம். மொட்டை ராஜேந்திரன் மருத்துவராக இருக்கும் மனநல மருத்துவமனையில் கரண்ட் கட் ஆகி விட்டது. இதனை சரிசெய்ய வரும் போது டிக்கிலோனா என எழுதப்பட்டுள்ள பழைய காரின் டிக்கியில் யாரோ ஒருவர் இருப்பதை பார்த்து உள்ளே நுழைகிறார் சந்தானம்.

உள்ளே சென்று பார்த்தால் ஒரு மிகப்பெரிய வீடு போல காட்சியளிக்கிறது. அங்கு ஒரு டைம் ட்ராவல் மெஷின் உள்ளது. மறைமுகமாக நடக்கும் இந்த வேலையை பார்த்த சந்தானம் போலீஷ்க்கு தகவல் கொடுக்கிறேன் என மிரட்டுகிறார்.

அந்த சமயத்தில் அவருடைய நண்பர் யோகி பாபு ஷாக்கடித்து கீழே விழுந்து பெரிய புத்திசாலியாக விழிக்கிறார். அதன் பின்னர் அந்த மெஷினை எப்படி பயன்படுத்த வேண்டும் என யோகி பாபு கூற ஒருவர் டைம் ட்ராவல் செய்து விட்டு வருகிறார்.

அதன் பின்னர் சந்தானம் அந்த மிஷினுக்குள் செல்ல முடிவு செய்கிறார். அதன் பின்னர் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

சந்தானத்தின் நடிப்பு சூப்பர்.
யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் காமெடி கலக்கல்.

அர்வியின் ஒளிப்பதிவு சூப்பர்

ஜோமின் எடிட்டிங் கச்சிதம்

யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் சூப்பர்.

இயக்குனர் கார்த்திக் யோகி கதையை காமெடியாக அழகாக கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் டவுன் :

சயின்ஸ் பிக்ஷன் படம் என்றாலும் சில காட்சிகள் நம்ப முடியாதவைகளாக உள்ளன.

வழக்கமான லாஜிக் மீறல்கள்

REVIEW OVERVIEW
டிக்கிலோனா விமர்சனம்
dikkilona-movie-reviewமொத்தத்தில் டிக்கிலோனா திரைப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.