நடிகர் விக்ரமின் பொன்னியின் செல்வன் வசனத்தை அசராமல் பேசி காண்பித்த துருவ் விக்ரமின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் மாபெரும் வெற்றியை கொண்டாடி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் முதல் பாகம் வசூல் ரீதியாக புதிய சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் பேசியுள்ள ‘அவளை மறக்கத்தான்’ என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனை பலரும் மீம்ஸ் வடிவங்களில் சித்தரித்தும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தபோது தனது தந்தை பேசிய அந்த பொன்னியின் செல்வன் வசனத்தை மாணவர்கள் மத்தியில் அசராமல் பேசி காண்பித்து அரங்கத்தை அதிக வைத்திருக்கிறார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.