துருவ் விக்ரமுக்கு ஜோடியாக களமிறங்க உள்ளார் பிரபல நடிகையின் மகள்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக களமிறங்கும் பிரபல நடிகையின் மகள்..‌‌ விக்ரம் எடுத்த அதிரடி முடிவு

இந்த படத்தை தொடர்ந்து மகான் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். அடுத்ததாக அவரை தெலுங்கு திரையுலகில் களம் இறக்க தீவிரமான முயற்சியில் விக்ரம் இறங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்காக தொடர்ந்து பல்வேறு கதைகளை கேட்டு வருகிறாராம். கதை கேட்பதற்கு முன்பாகவே துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கப்போவது ரோஜாவின் மகள் தான் என முடிவெடுத்துள்ளார்.

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக களமிறங்கும் பிரபல நடிகையின் மகள்..‌‌ விக்ரம் எடுத்த அதிரடி முடிவு

நடிகை ரோஜாவின் மகள் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.