Dhruv Vikram and Mari Selvaraj Movie Update

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Dhruv Vikram and Mari Selvaraj Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய ஒரே மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய தந்தையுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் சியான் 50 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உலக ஒலிம்பிக் திருவிழா : இந்திய தேசியக் கொடியுடன் மேரிகோம், மன்பிரீத் சிங்..

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 50% நிறைவடைந்துள்ளன. இந்த படத்தை முடித்தவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் துருவ் விக்ரம். பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யாவுக்கு எதிராக செயல்பட களமிறங்கும் பிரபல கட்சி! – கோபத்தில் ரசிகர்கள் | Latest Cinema News