நீங்க தல ரசிகரா தளபதி ரசிகரா என கேட்கப்பட்ட கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்துள்ளார் துருவ் விக்ரம்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துரு விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இந்த படத்தை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மகான் படத்தில் நடித்தார். அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மாமன்னன் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ் அந்த படத்தை முடித்த பிறகு துருவ் விக்ரம் படத்தை இயக்குனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் துருவ் விக்ரம் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு இவரிடம் நீங்க தல ரசிகரா? தளபதி ரசிகரா? என கேள்வி கேட்க அவர் ஓப்பனாக நான் தளபதி ரசிகர் என பதிலளித்துள்ளார். துருவ் இவ்வாறு பேசிய வீடியோவை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.