Dhoni Performance
Dhoni Performance

Dhoni Performance – ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே நடந்த 3-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடந்தது. 231 ரன்கள் கடந்து இந்தியா வெற்றி பெற்றது.

கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டகாரர்கள் ரோகித் மற்றும் தவான் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனி 87 ரன்களுடன், ஜாதவ் 61 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து களத்தில் இருந்தனர்.

இறுதியில் இந்தியா 49.2 –வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

விராட் கோலியுடன் இணைந்து 54 ரன்கள் சேர்த்த தோனி, ஜாதவுடன் இணைந்து 121 ரன்கள் குவித்தார். மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்த தோனி ஆட்ட நாயகனாக தேர்ந்தேடுக்கபட்டு விருது பெற்றார்.

தோனி கூறியது : “நம்பர் 4 அல்லது 6 என்று எந்த இடத்தில் களம் இறங்கினாலும் பேட்டிங் செய்வது எனக்கு மகிழ்ச்சியே.

ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இடத்தை மாற்றிக் கொள்ளும் போது, அணியின் வலிமையை சமமாக வைத்துக் கொள்வது முக்கியமானது.

14 ஆண்டுகளுக்கு பிறகு நான் 4-வது இடத்தில் களம் இறங்க விரும்புகிறேன் அல்லது 6 இடத்தில் களமிறங்க விரும்புகிறேன் என்று என்னால் கூற இயலாது.

இன்று விளையாடிய மெல்போர்ன் பிட்ச் “ஸ்லோ”-வானது. ஆகவே, விரும்பிய போது ஹிட் ஷாட் அடிப்பது கடினம்.

இதை கடைசி வரை கடைபிடிப்பது முக்கியதுவ்ம் வாய்ந்தது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்பது முக்கியம் என்றும் நினைத்தேன்.

ஏனென்றால், முக்கியமான பந்து வீச்சாளர்கள் அவர்களது 10 ஓவர்களை முடிக்க வேண்டும்.

மேலும், ஜாதவ், கிரிக்கெட்டிற்கு தொடர்பிள்ளாத அன் ஆர்தோடாக்ஸ் ஷாட்ஸ் மூலம் பவுண்டரிகள் விளாசினார்.” என்றார்.