
Kabil Dev : இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் வெற்றி கேப்டனாக திகழ்ந்தவர் தோனி.
தோனி இந்திய அணியின் கேட்டனாக மட்டும் செயல்படாமல் சிறந்த விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார்.
இந்தியாவிற்காக ஒருநாள் மற்றும் உலக கோப்பையை வென்று கொடுத்த தோனிக்கு தற்போது இந்திய டி-20 அணியின் இடம் கிடைக்கவில்லை.
இதனால் தோனியின் டி-20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தோனிக்கு ஆதரவாக கபில் தேவ் தன் கருத்தை தெரிவிதுள்ளார். கபில் தேவ் இந்தியாவிற்காக முதல் முதலில் உலக கோப்பையை வாங்கி கொடுத்தவர்.
இவர் தோனிக்கு ஆதரவாக தனது கருத்தை இந்திய கிரிக்கெட் நிறுவனத்திற்கு சூசகமாக தெரிவிதுள்ளார்.
கபில் தேவ் கூறியது :
இப்பொழுது இருக்கும் தோனியிடம் 20 வயது தோனியின் ஆட்டத்தை எதிர்பார்பது மிகவும் தவறாது என்றும் தோனி மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர், அவரது அனுபவம் அணிக்கு உதவும் மற்றும் அவரின் முடிவுகள் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல கூடியது.
மற்றவர்கள் எதிர்பார்பது போல அவரால் மீண்டும் 20 வயதிற்கு செல்ல முடியாது, மேலும் அவருக்கு இப்பொழுது அவருக்கு 30 வயது ஆகிறது அவரால் முயன்ற அளவிற்க்கு அவர் இந்திய அணிக்கு ஸ்கோரை சேர்க்கின்றார் என்று கபில் தேவ் கூறினார்.