Dheena Movie Secrets
Dheena Movie Secrets

இதுவரை இப்படி யாருமே முதல் நாள் படப்பிடிப்பை நடத்தி இருக்க மாட்டார்கள் என தீனா பட ரகசியங்களை உடைத்துள்ளார் முருகதாஸ்.

Dheena Movie Secrets : தமிழ் சினிமாவின் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தீனா. இந்தப் படத்தில் அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் இணைந்து நடித்து இருந்தனர்.

முருகதாசின் அறிமுகப் படமான இப்படம் ஒரே வாரத்தில் முதலீட்டை எடுத்து லாபத்தை அள்ளிக் குவித்தது. அடுத்ததாக முருகதாஸ் தளபதி விஜய்யை வைத்து விஜய் 65 படத்தை இயக்க உள்ள நிலையில் பேட்டி ஒன்றில் சீனா பட ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது இந்த படத்தின் கதையை தயாரிப்பாளர் ஒருவரிடம் கூறினேன். அப்போது அஜித் அமர்க்களம் படத்தில் நடித்திருந்தார். அமர்க்களம் படமும் தீனா படத்தை போல ரவுடி கெட்டப் கொண்ட படம் தான்.

இதனால் தயாரிப்பாளர் கொஞ்சம் தயக்கம் காட்டினார். வேறு கதையை உருவாக்குமாறு கூறினார். அதன் பின்னர் அஜித் சிட்டிசன் படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார்.

இதனை அடுத்து அஜித் ரெட்டை ஜடை வயசுபடத் தயாரிப்பாளருக்கு இன்னொரு படத்தை செய்து கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார். படமும் தொடங்கியது ஆனால் அந்த இயக்குனரின் நடவடிக்கை சரியில்லாததால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அப்போது தான் அமர்க்களம் படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் என்னைப்பற்றி கூறினார்.

உடனே என்னை அழைத்தார்கள் நானும் சென்று கதை கூறினேன். கதை பிடித்துப் போக உடனே தயாரிப்பாளர் எனக்கு முன் பணமாக ஆயிரத்து ஒரு ரூபாய் கொடுத்தார்.

பொதுவாக ஆடி மாதத்தில் எந்த ஒரு புது படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க மாட்டார்கள்‌ நான் கதை சொன்ன நாளில் இருந்து சரியாக ஒரு வாரத்தில் ஆடி மாதம் துவங்கவுள்ளது. நான் படம் எடுக்க நீண்ட நாள் ஆகும் என எண்ணி கதையை சொல்லிக் கொண்டு மட்டும் தான் இருந்தேன் எழுதி வைக்கவில்லை.

இதனையடுத்து ஒரே வாரத்தில் கிடுகிடுவென கதையை எழுதி முடித்தேன். முதல் நாள் படப்பிடிப்பில் அஜித் மட்டும் தான் இருந்தார் வேறு யாருமில்லை. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படப்பிடிப்பை யாரும் நடத்தி இருக்க மாட்டார்கள் என முருகதாஸ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

தீனா படத்தின் வெற்றியால் கிடைத்த வாய்ப்பு தான் ரமணா எனவும் தெரிவித்துள்ளார்.