நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நாயகியாக நடித்த இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வரும் தர்ஷகுப்தா தற்போது சிவப்பு நிற ஆடையில் பயங்கரமாக கவர்ச்சி காண்பித்து ரசிகர்களை கவரும் வகையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.