வாத்தி திரைப்படத்தின் பிரமோஷனில் தனுஷ் பாண்டியா வீடியோ வைரலானது.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து முடித்து இருக்கும் வாத்தி திரைப்படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கில் சார் என்ற தலைப்புடன் நேரடியாக வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் தெலுங்கு பிரமோஷன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் ரசிகர்களுக்காக இப்படத்தில் இடம்பெற்றிருந்த “வா வாத்தி” பாடலை தமிழ் & தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பாடி அனைவரையும் அசத்தியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.