நடிகர் சூரி பகிர்ந்திருக்கும் நெகிழ்ச்சியான பதிவிற்கு லவ் யூ என ரீட்வீட் செய்திருக்கும் தனுஷின் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “விடுதலை” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் பாடி இருக்கும் ‘ஒன்னோட நடந்தா’ என்னும் முதல் பாடல் நேற்றைய தினம் வெளியானது.

இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்பாடல் குறித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷிற்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவினை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சார்க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கெல்லாம் பெருமை சார் என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு நடிகர் தனுஷ் லவ் யூ என கூறி ரீட்வீட் செய்துள்ளார். இவர்களது இந்த பதிவு இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.