நடிகர் தனுஷின் பொல்லாதவன் திரைப்படத்தின் 15th இயர் செலிப்ரேஷன் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபல முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த 8 நவம்பர் 2007 ஆம் ஆண்டு ஆக்சன் திரில்லர் திரைப்படமாக பொல்லாதவன் திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறன் அறிமுகம் ஆகியிருந்தார்.

இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து திவ்யா ஸ்பந்தனா, கருணாஸ், சதீஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவான இப்படம் மிகப்பெரிய நேர்மறையான பதிலைப் பெற்று , இளைஞர்கள் மத்தியில் பஜாஜ் பல்சரை பிரபலமாக்கியது. மேலும் இந்தப் படம் வெற்றியடைந்ததால், பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை பொல்லாதவன் திரைப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களை நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவையும் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.