தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் மாஸ் கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Web Ads

மாரி செல்வராஜ் தனுஷை வைத்த படம் இயக்க உள்ளார்.

Dhanush-Mari Selvaraj joins mass alliance

Dhanush-Mari Selvaraj joins mass alliance

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். கர்ணன் மாமன்னன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் தற்போது விக்ரம் மகனான துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்த படத்தின் அப்டேட்டை மாரி செல்வராஜ் சொல்லி இருக்கிறார்.

இந்த படம் முடிந்த கையோடு தனுஷ் வைத்து படம் இயக்கப் போவதாக பேசியுள்ளார். அதாவது பைசன் படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து படம் இயக்கப் போவதாகவும் கர்ணன் படத்திலிருந்து இந்த படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால் சில காரணங்களால் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது ஒரு எளிமையான கதையை பெரிய பட்ஜெட்டில் எடுக்க நினைத்திருக்கிறேன். என் கேரியரில் ஒரு மைல் கல்லாக இந்த படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் தற்போது அந்த படத்தில் காண வேலைகள் தொடங்கிவிட்டன என்றும் கூறியிருக்கிறார்.

இவரின் எந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இது மட்டுமில்லாமல் இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Dhanush-Mari Selvaraj joins mass alliance

Dhanush-Mari Selvaraj joins mass alliance