மும்பையில் நடக்கப்பட்ட “தி கிரே மேன்” படத்தின் ப்ரோமோஷனுக்கு வேட்டி சட்டையில் மாஸ் கட்டி வந்த தனுஷின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் ஹாலிவுட் களமிறங்கி நடித்து முடித்திருக்கும் படம் தான் “தி கிரே மேன்”. இப்படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி ருசோ ஆகிய ( ருசோ பிரதர்ஸ்) இயக்கியுள்ளனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் இதன் மூலம் ஹாலிவுட் அறிமுகமாகியுள்ளார். இதில் இவருடன் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஜூலை 26 ஆம் தேதி நெட் பிலிப்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் பிரமோஷன்விழாவிற்கு நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்கள் உடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தார்.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது மும்பையில் நடத்தப்பட்டு வரும் பிரமோஷன் விழாவிற்கு நடிகர் தனுஷ் நமது பாரம்பரியமான வேஷ்டி சட்டையில் கலந்துகொண்டு மாஸ் காட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்த நிலையில் அதனை தனுஷ் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.