மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் இணைந்துள்ளார் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாத்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணைந்த தனுஷ்.. பூஜை உடன் தொடங்கிய படப்பிடிப்பு - யார் அந்த இயக்குனர்?

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கியிருக்கிறார். உலகம் முழுவதும் இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் கைகோர்த்துள்ளார். தெலுங்கில் சில வெற்றி படங்களை கொடுத்த சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படம் குறித்த தகவல் பரவி இருந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணைந்த தனுஷ்.. பூஜை உடன் தொடங்கிய படப்பிடிப்பு - யார் அந்த இயக்குனர்?

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படம் பேன் இந்தியா படமாக வெளியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.