போயஸ் கார்டனில் கட்டிய தனது பிரம்மாண்ட வீட்டை கிப்டாக கொடுத்துள்ளார் தனுஷ்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மூன்று நாளில் 43 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த வீட்டிற்கு பால் காய்ச்சி குடி புகுந்துள்ளார்.

இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் தனுஷ் ஆசையாக கட்டிய இந்த வீட்டை தன்னுடைய அப்பா அம்மாவிற்கு கிப்டாக அளித்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.