கேப்டன் மில்லர் பட லுக்கில் தனுஷின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வாத்தி திரைப்படம் வெளியானது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கும் இந்த படத்தில் சுதீப் கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் தனுஷ் மாஸாக இருக்கும் ஒரு புகைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

https://twitter.com/CaptainMilIer/status/1628626395785052160?t=vPN6WduElTtXoHAsZrYruQ&s=19