தனுஷின் புகைப்படத்தை வைத்து கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டரை தத்ரூபமாக வரைந்து காட்டிய தனுஷ் ரசிகரின் டிராயிங் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் நானே வருவேன் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கப் போகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என்ற தகவலைத் தவிர வேறு எந்த தகவலும் இப்படம் குறித்து வெளிவராததால் இப்படத்தின் மீதுள்ள ஆர்வம் கொண்ட தனுஷ் ரசிகர்கள் அண்மையில் கேப்டன் மில்லர் படத்திற்கான போஸ்டரை அவர்களே உருவாக்கி வெளியிட்டிருந்தனர். அதைப் பார்த்த நடிகர் தனுஷ் அவர்களை பாராட்டி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில் இருக்கும் தனுஷ் பிக்சரை வைத்து கேப்டன் மில்லர் படத்திற்கான போஸ்டரை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். அதனை வீடியோ பதிவாக அவர் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.