ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் FDFS பார்க்க வந்த தனுஷின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை திரையரங்குகளில் உற்சாகத்துடன் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்துள்ளார். ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த தனுஷை ஆரவாரம் செய்து ரசிகர்கள் வரவேற்றனர். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.