தனலட்சுமி பிக் பாஸ் குழுவினரிடம் மறைத்த மிகப் பெரிய உண்மையை தன் வாயாலே உளறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து செய்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி இன்றோடு ஆறு நாட்கள் ஆகின்றன.

தன் வாயாலே கெடும் தனலட்சுமி.. பிக் பாஸ் குழுவினரிடம் மறைத்த மிகப்பெரிய உண்மை - அவரே உளறிய அதிர்ச்சி தகவல்

இந்த முறை சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களாகவும் சில போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் டிக் டாக் பிரபலமான தனலட்சுமி. உள்ளே வந்த முதல் வாரத்திலேயே ஜி பி முத்துவுடன் பிரச்சனை செய்து தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டுள்ளார். ‌

இப்படியான நிலையில் அவர் தன் வாயாலேயே பிக் பாஸ் குழுவினரிடம் மறைத்த உண்மையை உளறி உள்ளார். சக போட்டியாளர் ஒருவரிடம் என்னால் யாரையும் அட்ஜஸ்ட் செய்து வாழ முடியாது, ஐந்து சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சி செய்து வந்தேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வருடத்திற்கு முன்பு கமிட்டான திருமண வாழ்க்கையை தவிர்த்து விட்டேன் என கூறியுள்ளார்.

தன் வாயாலே கெடும் தனலட்சுமி.. பிக் பாஸ் குழுவினரிடம் மறைத்த மிகப்பெரிய உண்மை - அவரே உளறிய அதிர்ச்சி தகவல்

அது மட்டுமல்லாமல் காதல் ஏதாவது இருக்கிறதா என பிக் பாஸ் குழுவினர் கேட்டதற்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என சொல்லிவிட்டேன். இதையெல்லாம் அவர்களிடம் எதற்கு சொல்ல வேண்டும் என அதிகார தோரணையில் பேசி இருப்பது அவரது பெயரை மேலும் டேமேஜ் செய்து வருகிறது. நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரமே வெளியேற்றப்பட வேண்டிய போட்டியாளர் தனலட்சுமி தான் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?