Dha Dha 87

Dha Dha 87 : விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87.

இந்த படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நிரஞ்சன் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள், டீஸர், ட்ரைலர் ஆகியவை யூ ட்யூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தது.

மேலும் இப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 1 முதல் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Dha Dha 87 Dha Dha 87

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.