டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா? சந்தானம் வெளியிட்ட பதிவு.!!

Web Ads

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Devils Double Next Level movie trailer update

Devils Double Next Level movie trailer update

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது ஹீரோவாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறார் தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தற்போது பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி நெஸ்ட் லெவல் என்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன் , கௌதம் வாசுதேவ் மேனன் கஸ்தூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Web Ad 2

வருகிற மே மாதம் 16ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவிப்பை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த பதிவு இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.