Web Ad 2

தேவி ஸ்ரீபிரசாத் ஹீரோவாக நடிக்கும் ‘எல்லம்மா’ பட அப்டேட்ஸ்..

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை தொடர்ந்து, தேவி ஸ்ரீ பிரசாத்தும் நாயகனாக அறிமுகமாகிறார்.

வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இப்படத்தில் நாயகனாக நடிக்க நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இறுதியாக தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவுள்ளார்.

’எல்லம்மா’ படத்துக்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியிருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். நாயகனாக நடிப்பது மட்டுமன்றி ‘எல்லம்மா’ படத்துக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. தில் ராஜு தயாரிக்கவுள்ள இப்படத்தின் இதர நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் ‘பாலகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வேணு எல்டண்டி. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வேணு எல்டண்டி.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீபிரசாத். இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளதால், பிற படங்களின் இசையமைப்புக்கு சில காலம் ஓய்வு கொடுப்பார் என தெரிகிறது.

devi sri prasad rumoured to lead venu yeldandi next yellamma
devi sri prasad rumoured to lead venu yeldandi next yellamma