December 7 Release List

December 7 Release List :  தமிழ் சினிமாவில் இந்த வாரம் மொத்தம் 4 படங்கள் மோதி கொள்ள உள்ளன.

இவைகளில் எந்தெந்த படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமாவால் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீசாகி விடுகின்றன.

அப்படி இந்த வாரமும் தமிழ் சினிமாவில் மொத்தம் 4 படங்கள் ரிலீசாக உள்ளன. அந்த லிஸ்ட் இதோ

  1. சீமத்துரை
  2. தோணி கபடி குழு
  3. வினை அறியார்
  4. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு

இந்த நான்கு படங்களில் சீமத்துரை கிராமத்து காதலை பேசும் படமாக உருவாகி இருப்பதால் இப்படத்திற்கு இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்ற படம் அடல்ட் காமெடி படமாகவும் உருவாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமல் நடித்துள்ள இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்ற படம் உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த 4 படங்களில் உங்களின் சாய்ஸ் எது ரசிகர்களே?