December 21 Release

December 21 Release : கிறிஸ்துமஸ் விடுமுறையில் மொத்தம் 6 படங்கள் ரிலீஸாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீசாகி விடும். அதுவே பண்டிகை நாட்களாக இருந்தால் பல படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும்.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவும் பல படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே சீதக்காதி, அடங்கமறு ஆகிய படங்கள் டிசம்பர் 21-ல் ரிலீஸ் என அறிவித்து இருந்தனர்.

இதனையடுத்து விஷ்ணு விஷால், ஓவியா இணைந்து நடித்துள்ள சிலுக்குவார் பட்டி சிங்கம் என்ற படமும் கிறிஸ்துமஸ் போட்டியில் இணைந்திருந்தது.

மேலும் தனுஷின் மாரி 2 படமும் டிசம்பர் 21-ல் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர். இவைகளை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள கனா படமும் டிசம்பர் 21 ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஷாலின் தயாரிப்பில் கன்னட நடிகர் நடிப்பில் உருவாகியுள்ள KGF படமும் டிசம்பர் 21-ல் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் டிசம்பர் 21-ல் மொத்தம் 6 படங்கள் மோத உள்ளன. அதன் லிஸ்ட்

1. மாரி 2
2. சிலுக்குவார்பட்டி சிங்கம்
3. KGF
4. சீதக்காதி
5. அடங்கமறு
6. கனா

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.