அரபு நாட்டுக்கு சென்று அரபி குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார் தொகுப்பாளினி டிடி.

DD Dance to Arabic Kuthu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் படத்தை இயக்க அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற பாடல் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் நடனமாடி அந்த வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் சமந்தா கூட நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தற்போது டிடி இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அரபு நாடான துபாய்க்கு சென்று உள்ள டிடி சமந்தா அளவுக்கும் இல்ல பூஜா ஹெக்டே அளவுக்கும் இல்ல ஆனா அரபு நாட்டுக்கு வந்துட்டு அரபிக் குத்துபாடலுக்கு டான்ஸ் ஆடலாம் எப்படி அதான் சும்மா ஒரு ட்ரையல் சொல்லி இந்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.