நடிகை தர்ஷா குப்தா ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் தர்ஷா குப்தா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை விதவிதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் செய்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இப்புகைப்படங்களை பார்த்து வாயடைத்து வியந்து போன ரசிகர்கள் இதனை ஷேர் செய்து இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.