கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது.மாதத்திற்கு 3 சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பிற்கான அளவு 13% குறைவு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சாக்லேட் – இல் உள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் , இரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாக்லேட் -இல் உள்ள பிளவோனாடுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இரத்த குழாய்களில் வீக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்கிறார், பிரபல ஆராய்ச்சியாளர் சயாகிரிட்.

கருப்பு நிற சாக்லேட்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை, அதிலுள்ள கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடியது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக உள்ளது.

மேலும், நாம் சாப்பிடும் சாக்லேட்டில் 75% கோகோ இருக்கவேண்டும், அத்தகைய சாக்லேட்கள் தான் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருப்பு சாக்லேட் சாப்பிடுவதால், ரத்தஓட்டம் சீரடையும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.அதேவேளையில், இதயநோய், சர்க்கரைநோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் டாக்டரிடம் ஆலோசித்து விட்டு கருப்பு சாக்லேட் சாப்பிடுவது நல்லது