வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமாகி உள்ளார்.
தமிழ் சினிமாவில் வேட்டையாடு விளையாடு, பைரவா, வடசென்னை என பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான இவர் பிரபல நடிகர் முரளியின் தம்பி ஆவார்.
அண்ணனின் பெயரை பயன்படுத்தாமல் தனது நடிப்பால் திரையுலகில் சாதித்து காட்டினார். தற்போது இவருக்கு 48 வயதாகிறது.
சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படவே கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பட்டுள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணி அளவில் மரணமடைந்துள்ளார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.