திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மேகம் கருக்காதா பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு நடன இயக்குனர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார். இதில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்த இப்படம் சமீபத்தில் ஓ டி டி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருந்த மேகம் கருக்காதா பாடலுக்கு ரசிகர்கள் அதிக அளவில் ரீல்ஸ் வீடியோ செய்து வைரல் ஆக்கினர்.

இந்நிலையில் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த மேக்கிங் வீடியோவை டான்ஸ் மாஸ்டர் ஜானி ட்விட்டரில் வெளியிட்டு இப்பாடலின் வெற்றிக்கு ரசிகர்களிடம் நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அதில் தனுஷுக்கு அவர் நடன அசைவுகளை சொல்லித் தரும் இந்த வீடியோ இப்போது ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.