கவினுக்கு டாடா திரைப்படம் வெற்றியை கொடுக்கணுமா என்பதை பார்க்கலாம் வாங்க.

அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டாடா. கவின் நடிப்பில் வெளியான லிப்ட் படத்திற்கு பிறகு வெளியாகி உள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கதைக்களம் :

ஒரே கல்லூரியில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் என இருவரும் படித்து வந்த நிலையில் இவர்களின் காதல் கர்ப்பம் வரை செல்ல கவின் கர்ப்பத்தை கலைக்க சொல்ல அபர்ணா தாஸ் மறுப்பு தெரிவிக்க பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வர திருமணத்திற்கு பிறகும் குடித்துவிட்டு கவின் ஊதாரியாக திரிய இதனால் அபர்ணா குழந்தை பெற்றுக் கொண்ட கையோடு குழந்தையை மறுக்க முடியும் விட்டுவிட்டு தன்னுடைய பெற்றோருடன் சென்று விடுகிறார்.

இதனால் ஊதாரியாக இருந்த கவின் தன்னுடைய மகனுக்காக தனது போக்கை மாற்றிக் கொண்டு நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்கிறார். இப்படியான நிலையில் பல வருடங்கள் கழித்து அபர்ணாதாசை அவர் சந்திப்போம் அதன் பிறகு இருவர்களும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை.

படத்தைப் பற்றிய அலசல் :

கவின் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர கொஞ்ச இடமே வரும் அபர்ணாதாஸ் அதிலும் பயங்கரமாக ஸ்கோர் செய்கிறார்.

கவினின் நண்பர்களாக வரும் ஹரிஷ் ஆகியோர் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர். படத்தின் இசையும் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து மக்களை கவர்கிறது.

அறிமுக இயக்குனராக இருந்தாலும் கணேஷ் அழகான திரைக்கதை மூலம் படத்தை வெற்றி பாதையில் கொண்டு சென்றுள்ளார்.

REVIEW OVERVIEW
டாடா விமர்சனம்
dada-movie-reviewமொத்தத்தில் டாடா தமிழ் சினிமாவில் தனி கவனம் பெறும்.