இனிமே குக் வித் கோமாளி ஷோவுக்கு வரமாட்டேன் என அதிர்ச்சி கொடுத்துள்ளார் சிவாங்கி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று வருகிறார் சிவாங்கி.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இதனை நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக கோமாளியாக பங்கேற்று வந்த நிலையில் தற்போது போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அடுத்த சீசனுக்கும் குக் வித்து கோமாளி ஷோக்கு வருவீங்களா என கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் சிவாங்கி இதுதான் கடைசி இனி இந்த ஷோவுக்கு வரமாட்டேன் என அதிர்ச்சி கொடுத்துள்ளார்.