Cricket Players Mithali Raj – மிதாலி, ஹார்மன் பிரீத் மோதலை முடிவுக்கு கொண்டு வர பி.சி.சி.ஐ நிர்வாகம் கூட்டம் ஒன்றை நடத்தியது.
நடந்து முடிந்த டி-20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் மோசமாக தோல்வி அடைந்தது.
மற்றும் அப்போட்டியில் மிதாலி ராஜ் உடல் நிலை காரணமாக நீக்கப்பட்டதாக இந்திய கேப்டன் ஹர்மித்பிரீத் கவுர் கூறி இருந்தார். மற்றும் இது நிர்வாகம் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் தெரிவித்து இருந்தார்.
ஆனால், மிதாலி ராஜ் மேனஜர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹர்மன்பீரித்தை கடுமையாக திட்டி பதிவிட்டு இருந்தார். இதற்கிடையே பி.சி.சி.ஐ இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர உள்ளது.
நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில், “உலக கோப்பை அரையிறுதியில் மிதாலிக்கு இடம் தரவில்லை.
இது தொடர்பாக அணிக்கு தொடர்பில்லாதவர்கள் கருத்து தெரிவிக்கிறேன் என்று மற்ற வீராங்கனைகளை வசைபாடுவது என்பது ஏற்க முடியாது என்று கூறினார்.
மேலும், இந்திய அணி வீரர்கள் விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தனித்தனியாக பேசி முடிவு செய்வோம்.
மற்றும் பயிற்சியாளர் ரமேஷ் பவாரிடமும் விசாரிக்க உள்ளோம், இதற்கான கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. எனவே இந்த பிரச்சைக்கு விரைவில் முடிவு வரும்” என்றார்.